பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவில் பயனர்கள் நெட்ஃபிலிக்ஸ் பாஸ்வேர்டை ஷேர் செய்வதற்கு தடை விடுத்து வெகுவாக குறைத்து வருகிறது.
அதன்படி, நெட்ஃபிலிக்ஸ் கணக்கை ஒரு குடும்பம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நெட்ஃபிலிக்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் எங்கிருந்தாலும் நெட்ஃபிலிக்ஸை பயன்படுத்தலாம்.
மேலும், பயனர்கள் தங்கள் கணக்குகளை தங்கள் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.