அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற முடியாது… டிடிவி தினகரன் பேட்டி

பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் அல்லது தனித்து போட்டியிடும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமமுக கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. முதலில் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றோம். இதன்பின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை சொல்ல முடியாத காரணத்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை.

இதனால் வரும் மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைப்பது குறித்து சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  இது உறுதியான பிறகு அறிவித்தால் தான் நாகரிகமாக இருக்கும். அதன்படி, எதிர்வரும் மக்களவை தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் அல்லது தனித்துப் போட்டியிடும். ஆனால், ஒருபோதும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற முடியாது.

எம்ஜிஆர் பற்றி அவதூறு.! ஆ.ராசாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!

இதனை எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பமாட்டார்கள். ஆதலால் இபிஎஸ்வுடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், வரும் தேர்தலில் அமமுக உறுதியாக வெற்றியை பதிவு செய்யும். தேர்தல் வெற்றி தோல்வியலாம் தாண்டி அரசியல் ரீதியாக நானும், ஓபிஎஸ்-யும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். பொறுத்திருந்து பாருங்கள், வரும் காலத்தில் இந்த எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

மேலும், இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பெரிதாக சாதிக்காது. இதனால் எங்கள் கூட்டணி உறுதியான பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், ஆளுநர் அந்த பதவிக்கு எந்த களங்கமும் வராமல் நடந்துகொள்ள வேண்டும். அதுதான் ஆளுநருக்கு நல்லது, அதை அவர் பின்பற்றுவார் என நம்புகிறேன் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

Leave a Comment