கழுகு பசித்தால் கீழே வந்து தான் ஆகணும்…ரஜினியை கலாய்த்தாரா ரத்னகுமார்?

லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார் லியோ வெற்றி விழாவில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காகம் மற்றும் கழுகு கதை ஒன்றை கூறியிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில், விஜய்யை தாக்கி தான் ரஜினி இப்படி பேசி இருக்கிறார் என தகவல்களை பரப்பினார்கள். இதனால், ரஜினி – விஜய் தரப்பு ரசிகர்களுக்கும் இடையே வாக்கு வாதமும் நடந்தது.

தற்பொழுது, நேற்று லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட படத்தின் இணை இயக்குனரான ரத்னகுமார், “எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான ஆகனும்” என்று பேசினார். இது மீண்டும் இணையத்தில் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. இந்து கருத்து ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெரியருந்தாலும், அப்போது ரஜினி சொன்ன காகம் விஜய்யை சொல்வது போல் இருப்பதாக ரசிகர்கள் கொந்தளித்துள்னர்.

ரஜினியின் காகம் – கழுகு கதை

இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘காகம் மற்றும் கழுகு இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கழுகு கீழே இருக்கும் போது காகம் அதனை தொந்தரவு செய்யும் ஆனால், கழுகு பறக்கும் அளவிற்கு என்ன முயற்சி செய்தாலும் காகத்தால் பறக்கவே முடியாது என தெரிவித்திருந்தார்.

பெரிதினும் பெரிது கேள்…விஜய் சொன்ன குட்டி கதை! அரங்கமே அதிர்ந்த தருணம்

லியோவில் கழுகு காட்சி

லியோ படத்தில் நடிகர் விஜய் கடைசி காட்சியில் கழுகிடம் பேசுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ரஜினி ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் பேசியதற்கு தான் விஜய் இந்த லியோ காட்சியின் மூலம் பதிலடி கொடுத்து இருக்கிறார் எனவும் கூறினார்கள்.

ஆனால், இது ரஜினி சாரை தாக்கி எடுத்த சீன்னு சொல்றது சுத்தமாக சம்மந்தமே இல்லாத ஒன்று என லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் பரமஹம்ஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவுபடுத்தினார். இது குறித்து பேசிய அவர், லியோ படத்தில் விஜய் கழுக்குடன் பேசும் காட்சியை நாங்கள் படமாக்கியது மே மாதம். ஆனால், ரஜினி சார் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது ஜூலை மாதம் என்று விளக்கம் கொடுத்தார்.

லோகேஷ் என்னோட கட்சியில் சேர்ந்தால் இந்த பதவி தான் கொடுப்பேன்! நடிகர் விஜய் கலகல பேச்சு!

ரத்னகுமார்

விழாவில் பேசிய அவர், மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல் மற்றும் லியோவில் நான் ரெடி பாடலை கதைக்களத்துக்காகஏற்றார் போல் எழுத்திருந்தோம் இப்போது அந்தப் பாடலை என்னவாக மாறியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.

நான் விஜய்யின் தீவிர ரசிகன், நான் சினிமாவுக்கு வர முக்கியமான காரணம் விஜய் தான். கொரோனா காலத்தின் போது நிறைய உதவியவர் தளபதி விஜய் என்றும், இந்த வாய்ப்பிற்காக தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி.. தல அஜித்.! மேடையில் சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்.!

‘நம்ம எவ்வளவு உயர போனாலும் பசிச்சா கீழே வந்து தான் ஆகணும்’ என ஒரு கருத்தை கூறினார். இதனையடுத்து, இது ரஜினிகாந்த் சொன்ன கதைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். இந்த கருத்துக்கு ஒரு பக்கம் ஆதரவு வந்தாலும், மறுபக்கம் எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது.

விஜய்யின் குட்டி கதை

ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருவர் ஈட்டியோட சென்று யானைக்கு குறி வச்சாரு..ஆனால் இறுதியில்  ஒன்னும் இல்லாம வந்தாரு.

இவ்ளோ கோவம்லாம் உடம்புக்கு நல்லதில்ல – ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்!

இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர். பாரதியார் சொல்வது போல் பெரிதினும் பெரிது கேள், எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க என்று கூறி, பெரிய இலக்கை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.