விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. ஒரே போட்டியில் இமாச்சல் வீரர் அர்பித் குலேரியா 8 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை

இந்தியாவில் நடைபெறும் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரான விஜய் ஹசரே கோப்பை, நடப்பு ஆண்டுக்கான சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் குருப் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள குஜராத் – இமாச்சல் பிரதேச அணிகள் மோதின.

சண்டிகர் செக்டர் 16 ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இமாச்சல் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 327 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக உர்வில் பட்டேல் 93 பந்துகளில் (5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள்) 116 ரன்களும், பிரியங்க் பன்சால் 118 பந்துகளில் 96 ரன்களும் எடுத்தனர்.

இமாச்சல் பிரதேசம் அணியை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் அர்பித் குலேரியா 9 ஓவர்களில் 50 ரன்களை கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 49வது ஓவரில் தனது லிஸ்ட் ஏ போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் 26 வயதான அர்பித் குலேரியா.

விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை.. இதை மட்டுமே கூறினேன்.. சர்ச்சைக்கு பதில் அளித்த கங்குலி!

இதற்கு முன்பு லிஸ்ட் ஏ போட்டிகளில் ஷாபாஸ் நதீம், ராகுல் சங்வி ஆகியோர் 8 விக்கெட்கள் வீழ்த்தியிருந்த நிலையில், இமாச்சல் வேகப்பந்து வீச்சாளர் அர்பித் குலேரியா 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.  அதுமட்டுமில்லாமல், உலக அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்திய 15-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் அர்பித் குலேரியா.

2018-இல் லிஸ்ட் ஏ அறிமுகமான குலேரியா இந்த சீசனில் நான்கு போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனிடையே, இப்போட்டியில் 328 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய இமாச்சல் பிரதேசம் அணி  49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 319 ரன்கள் மட்டுமே எடுத்து.

இதனால், 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.  அந்த அணியில் அதிகபட்சமாக பிரசாந்த் சோப்ரா 96, சுமீத் வர்மா 82 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணி தரப்பில் ஹேமங்க் பட்டேல் 3 விக்கெட்களையும் ஜெய்வீ பர்மார், சித்தார்த் தேசாய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.