Xiaomi 14 Series: 16 ஜிபி ரேம்..50 எம்பி டிரிபிள் கேமரா..90w ஹைப்பர்சார்ஜ்.! அறிமுகத்தில் மிரட்டும் சியோமி..!

சியோமி நிறுவனம், சீனாவில் “லீப் பியோண்ட் தி மொமென்ட்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் உள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியது.

சியோமி 14

டிஸ்பிளே

சியோமி 14-ல் 2670 x 1200 (1.5K) ரெசல்யூஷன் கொண்ட 6.36 இன்ச் ஓஎல்இடி பிளாட் டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டுள்ளது. அதோடு சூரிய ஒளியில் கூட தெளிவாக தெரியும் அளவிற்கு 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் உள்ளது.

பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய ஹைப்பர் ஓஎஸ் உள்ளது. ப்ராக்ஸிமிட்டி சென்சார், இன்ஃபிராரெட் ரிமோட் கண்ட்ரோல், ஃப்ளிக்கர் சென்சார், லேசர் ஃபோகஸ் சென்சார், கைரோஸ்கோப் போன்ற சென்சார்கள் உள்ளன.

கேமரா

கேமராவைப் பொறுத்தவரையில் லைகா சம்முலிக்ஸ் (Leica Summulix) லென்ஸைக் கொண்டிருக்கும் என சியோமி உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, லைகா சம்முலிக்ஸ் லென்ஸுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் 50 எம்பி டெலிஃபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா உள்ளது.

பேட்டரி

193 கிராம் எடை கொண்ட சியோமி 14 ஆனது அதிக நேர பயன்பாட்டிற்காக 4610 mAh உயர் ஆற்றல் கொண்ட பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை 90 வாட்ஸ் வயர்டு ஹைப்பர்சார்ஜ் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் ஹைப்பர்சார்ஜ் மூலம் வேகமாக சார்ஜ் செய்ய முடியும். அதோடு வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்கும் செய்து கொள்ளலாம் .

ஸ்டோரேஜ் மற்றும் விலை

பிளாக், வைட், ராக் கிரீன், ஸ்னோ மவுண்டன் பவுடர் என நான்கு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள சியோமி 14 ஸ்மார்ட்போன் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதன்படி, 8 ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் என நான்கு வேரியண்ட்கள் உள்ளன.

இதில் 8 ஜிபி ரேம் வேரியண்ட் 3999 யுவான் (ரூ.45,488) என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் வேரியண்ட் 4299 யுவான் (ரூ.49,334) என்ற விலையிலும், 16 ஜிபி ரேம் வேரியண்ட் 4599 யுவான் (ரூ.52,313) என்ற விலையிலும் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 4999 யுவான் (ரூ.57,367) என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.

சியோமி 14 ப்ரோ

டிஸ்பிளே

சியோமி 14 ப்ரோவில் 3200 x 1440 (2K) ரெசல்யூஷன் கொண்ட 6.73 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டுள்ளது. அதோடு சூரிய ஒளியில் கூட தெளிவாக தெரியும் அளவிற்கு 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் உள்ளது.

பிராசஸர்

இதிலும் அட்ரினோ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய ஹைப்பர் ஓஎஸ் உள்ளது. ப்ராக்ஸிமிட்டி சென்சார், இன்ஃபிராரெட் ரிமோட் கண்ட்ரோல், ஃப்ளிக்கர் சென்சார், லேசர் ஃபோகஸ் சென்சார், கைரோஸ்கோப் போன்ற சென்சார்கள் உள்ளன.

இந்த இரண்டு போன்கள் புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்கள் ஆகும். அதோடு, நிறுவனத்தின் புதிய ஹைப்பர்ஓஎஸ் இடம்பெறும் முதல் போன்களும் இவைதான்.

கேமரா

சியோமி 14 ப்ரோவில் லைகா சம்முலிக்ஸ் லென்ஸுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் 50 எம்பி டெலிஃபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா உள்ளது. இதனால் 4k வரையிலான தெளிவு கொண்ட வீடியோவைப் பதிவு செய்ய முடியும்.

பேட்டரி

223 கிராம் எடை கொண்ட சியோமி 14 ப்ரோ ஆனது அதிக நேர பயன்பாட்டிற்காக 4880 mAh உயர் ஆற்றல் கொண்ட பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை 120 வாட்ஸ் வயர்டு ஹைப்பர்சார்ஜ் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் ஹைப்பர்சார்ஜ் மூலம் வேகமாக சார்ஜ் செய்ய முடியும். அதோடு வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்கும் செய்து கொள்ளலாம் .

ஸ்டோரேஜ் மற்றும் விலை

பிளாக், வைட், ராக் கிரீன் என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள சியோமி 14 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதன்படி, 12 ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் உள்ளன.

இதில் 12 ஜிபி ரேம் வேரியண்ட் 4999 யுவான் (ரூ.57,367) என்ற விலையிலும், 16 ஜிபி ரேம் வேரியண்ட் 5499 யுவான் (ரூ.62,540) என்ற விலையிலும் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 5999 யுவான் (ரூ.68,831) என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.

இதில் டைட்டானியம் ஸ்பெஷல் எடிஷன் ஒன்று உள்ளது. இந்த மாடல் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் 6,499 யுவான் (ரூ.74,564) என்ற விலையில் கிடைக்கிறது. மேலும், சியோமி 14 சீரிஸ்வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.