உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறப்பு!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறக்கப்பட உள்ளது. 125 அடி உயரம் கொண்ட இந்த சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு ‘ஸ்மிருதி வனம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நாளை  நடைபெறும் நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இதை திறந்து வைக்க உள்ளார்.

நாளை நடைபெறவிருக்கும் திறப்பு விழாவுக்கு முன்னதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது செய்தி குறிப்பில், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை அனைத்துத் துறைகளிலும் மாற்றியமைத்த மாபெரும் ஆளுமை டாக்டர் அம்பேத்கர் என்று கூறினார்.

200 கிலோ ராமர் சிலை.. கிரேன் மூலம் அயோத்தி கோயிலுக்கு வருகை.!

மேலும், டாக்டர் அம்பேத்கரின் உணர்வை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை உருவாக்க சுமார் 400 டன் எஃகு பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த வரலாற்று தருணத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.