உலகக்கோப்பை 2023: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச தேர்வு..!

நடப்பு உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த  இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும்  மோதுகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இறுதிப்போட்டியில் இவ்விருஅணிகள்  மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இன்றைய இறுதிப்போட்டியில்  ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர் ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ்(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

இரு அணிகளும் அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்கள் தான் விளையாடுகிறார்கள். உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய 8-வது முறையும், இந்திய அணி 4-வது முறையும் களமிறங்குகிறது. இதில் இந்தியா இரண்டு முறையும், ஆஸ்திரேலியா ஐந்து முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

14 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

17 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

18 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

45 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago