மும்பை கோட்டையில் சென்னை கொடி பறக்குமா.? வெறித்தனமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ என அழைக்கப்படும் சென்னை-மும்பை இடையேயான போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. 

உலக கோப்பை போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் என்றால் ஐபிஎல் போட்டியில்  சென்னை – மும்பை அணி தான் என்றே கூறலாம். இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டியை பார்க்க ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த அளவிற்கு இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி கடுமையாக இருக்கும்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக முறை கோப்பையை வென்ற அணிகளும் இந்த இரண்டு அணிகள் தான். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 5 முறையும், தோனி தலைமையிலான சென்னை அணி 4 முறையும் வென்றுள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் 20 முறை மும்பை அணியும், 14 முறை சென்னை அணியும் வெற்றிபெற்றுள்ளது.

35-வது முறையாக இன்று சென்னை அணி மும்பை அணியை அவர்களுடைய சொந்த கோட்டையான (மும்பை) வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளனர். இந்த வான்கடே ஸ்டேடியத்தில் மும்பைக்கு எதிராக 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள  சென்னை அணி  3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை அணி 2 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடி அபார வெற்றியை பதிவு செய்து செம ஃபார்மில் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசன் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியிலே தோல்வி அடைந்தது. இந்நிலையில், இன்று நடைபெரும் போட்டியில் வெற்றிபெற்று முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்குகிறது. எனவே, இன்று நடைபெறும் இந்த போட்டியில் மும்பை கோட்டையில் சென்னை கொடி பறக்குமா.? அல்லது சென்னையை மும்பை விழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

சென்னை vs மும்பை : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்: 

மும்பை :

ரோஹித் சர்மா , இஷான் கிஷன் , சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, நேஹால் வதேரா, டிம் டேவிட், ரித்திக் ஷோக்கீன், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

சென்னை :

டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி , சிசண்டா மகலா/டுவைன் பிரிட்டோரியஸ், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தீபக் சாஹர்.

Leave a Comment