மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? சிறப்பு அம்சங்கள் என்ன..?

மகளீர் தின வரலாறு 

1908-ஆம் ஆண்டு பெண்கள் நியூயார்க்கில் குறுகிய வேலை நேரம், வாக்களிக்கும் உரிமை மற்றும் சிறந்த ஊதியம் ஆகியவற்றைக் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.  1910-ல்  உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் மகளிர் அலுவலகத்தின் தலைவரான கிளாரா ஜெட்கின் இதை முன்மொழிந்தார்.

அதனை  1911-ஆம் ஆண்டு, மார்ச்-11 ஆம் தேதி, ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து முதல் முறையாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர். அதன்பின் மார்ச் 8-ஆம் தேதி மகளீர் தினம் கொண்டாட தொடங்கினர். 1975ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை முதல் முறையாக சர்வதேச மகளிர் தினத்தை ஏற்பாடு செய்தது.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு..?

ஒவ்வொரு முந்தைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டு வேலை பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டனர். அந்த காலகட்டங்களில், பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், ஆணாதிக்கங்களும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வந்தது.

தடைகளை தகர்த்தெறிந்த பெண்கள் 

ஆனால் தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு ஏற்றவாறு அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வருகின்றனர். ஏன், ஒரு மாநிலத்தையே ஆளும் அளவிற்கு கூட பெண்கள் இன்று முன்னேறி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்றும் காணப்பட்டாலும், அதனை எதிர்த்து நின்று போராடக்கூடிய அளவிற்கு தைரியம் படைத்த பெண்களாக தான் இன்றைய சமுதாயத்தில் உருவாகி வருகின்றனர்.

பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற மனப்பான்மை தற்போது தகர்தெறியப்பட்டு, பெண்களும் படித்து முன்னேறலாம் அனைத்து துறைகளிலும் தடம் பதிக்கலாம் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.

அந்த வகையில், தேசிய மகளீர் தினமானது பெண்களை பாராட்டும் விதமாகவும், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் என பல இடங்களிலும் பெண்களை போற்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டுவரும் விதமாகவும் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், ஆதிக்கங்கள் என அனைத்தையுமே உடைத்தெறிந்து, ஆளுமை திறமையுடன் பல்வேறு போராட்டங்களிலும் வெற்றியை பெற்று தான் வருகின்றனர். சமூகம், குடும்பம், வேலை செய்யும் இடம் என அனைத்து இடங்களிலும் உள்ள சாவல்களிலும், சாதனை படைத்து பெண்கள் சாதனை கண்மணிகளாக தான் வலம் வருகின்றனர்.

Leave a Comment