சளி ஏன் உருவாகிறது…? இதனை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவது எப்படி…?

நமது சளி எப்படி உருவாகிறது? அதனை இயற்கையான முறையில் எப்படி வெளியேற்றுவது?

நமது உடலில் வியர்வை எப்படி கழிவு பொருளாக கருதப்படுகிறதோ அது போல தான் சளியும் கருதப்படுகிறது. நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று சளி. முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு மனிதனின் உடலில் சளி உற்பத்தி ஆகிக் கொண்டே தான் இருக்கும்.சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள் நமது வாய் மூக்கு தொண்டை நுரையீரல் இரைப்பை போன்ற பகுதிகளில் காணப்படும்.

நமது உடல் சளியை வெளியேற்றிக் கொண்டே இருக்கவேண்டும். ஆனால் நாம் அவ்வாறு சளியை வெளியேற்ற விடாமல், மருந்துகளை உட்கொண்டு சளியை  கட்டுப்படுத்துகிறோம். அவ்வாறு கட்டுப்படுத்தும் போது அந்த சளி நுரையீரலில் தேங்கி விடுகிறது. தற்போது இவ்வாறு தேங்கிய நிலையில், காணப்படும் சளியை வெளியேற்ற முற்படும் போது, இருமல், தும்மல், இளைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

நெஞ்சுச்சளி

நெஞ்சு சளிக்கு, தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து, நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளிபிரச்சனை நீங்கும். இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் சளி சேருதல் குணமாகும்

இருமல்

நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.

தொண்டை

இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

7 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

7 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

12 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

13 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

13 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

13 hours ago