முதல் வெற்றியை முத்தமிட போவது எந்த அணி..? இன்று ‘மும்பை -டெல்லி’ அணிகள் மோதல்.!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் – டெல்லி அணியும் அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதுகிறது. 

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் புள்ளி விவர பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தான். இரண்டு அணிகளும் இதுவரை இந்த சீசனில் விளையாடிய எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி 3 போட்டியிலும் தோல்வி அடைந்து 10-வது இடத்தில உள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு அணிகளும் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதவுள்ளது.

இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. மேலும். இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்பு 32 போட்டியில் நேருக்கு நேர் மோதியதில் மும்பை இந்தியன்ஸ் அணி 17 முறையும், டெல்லி அணி 15 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

எனவே, இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இரண்டு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மேலும், இன்று இரண்டு அணிகளில் விளையாடவுள்ள உத்தேச வீரர்களின் பட்டியல் குறித்த விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. இதோ..

மும்பை :

ரோஹித் சர்மா , இஷான் கிஷன் , கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான் ,ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

டெல்லி :

டேவிட் வார்னர் , ப்ரித்வி ஷா, மணீஷ் பாண்டே, பில் சால்ட், ரிலீ ரோசோவ், அபிஷேக் போரல் , ரோவ்மேன் பவல், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார் , குல்தீப் யாதவ்.

Leave a Comment