கோதுமை உற்பத்தி 11 கோடி டன்னை எட்டும்..! மத்திய அரசு கணிப்பு..!

இந்த ஆண்டின் கோதுமை உற்பத்தி 11 டன்னை எட்டும் என மத்திய அரசு கணித்துள்ளது. 

இந்தியாவில் இந்த ஆண்டின் கோதுமை உற்பத்தி 11 டன்னை எட்டும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. ஜூன் முதல் ஜூலை மாதம் வரை பயிர் வளரும் பருவமாக கணக்கிடப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டின் பயிர் பருவத்தில் 10.95 கோடி டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி கடந்த ஆண்டிற்கான பயிர் பருவத்தில் 10.77 கோடி டன்னாகக் குறைந்தது.

இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டில் கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது வேளாண் அமைச்சகம் கூறியது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பருவத்தில் கோதுமை உற்பத்தி 11.21 கோடி டன்னாக இருக்கும் என மத்திய வேளாண் அமைச்சகம் கணித்துள்ளது. இது கடந்த ஆண்டில் கிடைத்த உற்பத்தியை விட சுமாா் 44 லட்சம் டன் அதிகமாகும்.

மேலும் தட்பவெப்ப சூழல் சிறப்பாக இருந்ததால் கோதுமை உற்பத்தி அதிகரிக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட 2022-23 பயிர் ஆண்டின் பருவத்தில் கோதுமை பயிரிடப்பட்ட மொத்த பரப்பளவு 1.39 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து 343.23 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதனால் பயிர் உற்பத்தி அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment