ஊழல் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி உள்ளது.? கொந்தளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

திருவாருர் மாவட்டத்தில் நாகை எம்.பி.செல்வராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் 9 வருட பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் என்னவெல்லாம் என்பது குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், இந்தியாவில் இருக்கக்கூடிய ஊழலை ஒழித்தேத் தீருவேன் என பிரதமர் மோடி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் பிரதமர் மோடி அவர்களை பார்த்து கேட்டுக் கொள்ள விரும்புவது. ஊழலை பற்றி பேசுவதற்கு யோக்கியதை பிரதமராக இருக்க கூடிய மோடிக்கு உண்டா.? உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்பொழுது ஆதாரம் எடுத்து வெளியிடுகிறார்கள்.”

“ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது. சிஏஜி என்ன சொல்கிறது என்றால் ஒன்றியத்தில் நடைபெறக்கூடிய பாஜக ஆட்சி ஊழல் முறைகேடுகள் அதிகம் உள்ள ஆட்சி. லஞ்ச லாவண்யம் புகுந்து போன ஆட்சி என்று சொல்கிறது. மத்திய கணக்கு துறையுடைய உடைய அறிக்கை சொல்கிறது. ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.”

“ஒன்று பாரத் மாதா திட்டம், இரண்டு துவாரகா விரைவுப் பாதை கட்டுமான திட்டம், மூன்று சுங்கச்சாவடி கட்டணங்கள், நான்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஐந்து அயோத்தியா மேம்பாட்டு திட்டம், ஆறு கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வு திட்டம், ஏழு ஹெச்ஐஎல் விமான வடிவமைப்புத் திட்டம். இந்த ஏழு திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறது. நிதியை கையாள்வதில் மோசடிகள் அரங்கே இருக்கிறது என்று இந்த அறிக்கை வட்ட வட்டமாக அம்பலப்படுத்தி இருக்கிறது.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,