இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் அதிக முயற்சி எடுத்து வருகிறோம்..! பிரதமர் மோடி

உத்திர பிரதேசத்தில் நடைபெற்று வரும் உலக உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை பிரதம மந்திரி நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது பற்றி பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது பால், மீன்வளம், விவசாயம், உணவு பதப்படுத்துதல் துறைகள் மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவற்றில் மாற்றங்களை செய்ய பல புதிய முயற்சிகள் உள்ளதாக கூறினார்.

UP Global Investors 1
[Image Source : Twitter/@ANI]

இன்று, இந்தியா பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் நமது விவசாயிகளின் உற்பத்திக்கான செலவைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. எனவே இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் அதிக முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

UP Global Investors
[Image Source : Twitter/@ANI]

இதனையடுத்து நாம் இப்போது இந்தியாவின் ஒன்பது வகையான தினைகளை ‘ஸ்ரீ ஆன்’ என்று அழைக்கிறோம். இந்தியாவின் ‘ஸ்ரீ ஆன்’ உலகளாவிய ஊட்டச்சத்து பாதுகாப்பை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது எங்கள் முயற்சி என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Comment