மேகாலயா, நாகாலாந்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலின் இதுவரை 26.70% வாக்குகள் பதிவு என தேர்தல் ஆணையம் தகவல்.

மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், மேகாலயா சட்டப்பேரவை தேர்தலின் இதுவரை 26.70% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோன்று நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 37.63% வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம் சாகர்திகி தொகுதியில் 31.92% வாக்குகளும், ஜார்கண்ட் மாநிலம் ராம்நகர் தொகுதியில் 32.51% வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave a Comment