தமிழகம் என்ன சட்டவிரோத வார்த்தையா? – வானதி சீனிவாசன்

ஆளுநரின் கருத்தில் மாற்று கருத்து இருந்தால், அவற்றை கருத்துக்களால் தான் எதிர்கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் பேட்டி.

வானதி சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநரின் கருத்தில் மாற்று கருத்து இருந்தால், அவற்றை கருத்துக்களால் தான் எதிர்கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு போஸ்டர் அடிச்சி ஓட்டும், போராட்டம் நடத்துவோம் என கூறுவது எந்த அளவுக்கு கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய பண்பு உங்களிடம் உள்ளது என்பதை அது காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என குறிப்பிட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமிழகம் என்ன சட்டவிரோத வார்த்தையா? இந்திய இறையாண்மைக்கு எதிரான வார்த்தையா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

Leave a Comment