இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.! 

கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தினர். இத தாக்குதலில் இதுவரை இரு தரப்பில் இருந்தும் சுமார் 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் காசா நகர் பாலத்தீனியர்கள்.

இந்த போரில் அதிகமாக பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் என்பதை கூறி போர் நிறுத்தத்தை பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, அமெரிக்கா, கத்தார், எகிப்து நாட்டின் மத்தியஸ்தலத்தை அடுத்து 4 நாள் போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. இந்த நான்கு நாளில் இஸ்ரேல் – ஹமாஸ் என இரு தரப்பில் இருந்தும் பிணை கைதிகள் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று நான்காவது நாளில் ஹமாஸ் வசம் இருந்து 11 இஸ்ரேல் பிணை கைதிகள் விடுக்கப்பட்டனர். இதுவரை 50 பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். நேற்று கத்தார் நாட்டின் மத்தியஸ்த்தை தொடர்ந்து பிணை கைதிகளை மேலும் விடுவிக்க கூடுதல் 2 நாள் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.

ஹமாஸை ஒழிப்பது தான் ஒரே வழி.! இஸ்ரேல் பயணம் குறித்து எலான் மஸ்க் கருத்து.!

நேற்று விடுவிக்கப்பட்டதில் அமெரிக்காவை சேர்ந்த 4வயது சிறுமி அவிகெய்ல் இடன் (Avigail Idan) ஒருவர். இச்சிறுமியின் பெற்றோர்கள்  போர் தொடங்கிய நாளில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நாள் போர் நிறுத்தத்திற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.

ஜோ பைடன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கத்தார் மத்தியஸ்த்தை தொடர்ந்து இரண்டு நாள் போர் நிறுத்தம் எனும் முடிவு வரவேற்கத்தக்கது. என்று குறிப்பிட்டார் , மேலும், அவிகெய்ல் இடன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நான் அவளின் குடும்பத்தினருடன் பேசினேன், சொல்ல முடியாத அதிர்ச்சியிலிருந்து அவள் மீளத் தொடங்கும் போது அவளுக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்துள்ளோம்.

மனிதாபிமான அடிப்படையில், இந்த போர் இடைநிறுத்தம் என்பது, காசா பகுதி முழுவதும் துன்பப்படும் அப்பாவி பொதுமக்களுக்கு கூடுதல் உதவிகள் கிடைக்க உதவும் என கூறினார்.  பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கியதில் அமெரிக்கா முக்கிய பங்காற்றியுள்ளது.  வேறு எந்த நாடும் எங்களை (அமெரிக்கா) விட அதிகமாக நன்கொடை வழங்கவில்லை என்று,ம் ஜோ பைடன் வலியுறுத்தினார்.  பாலஸ்தீன மக்களுக்கான அமைதியான எதிர்காலத்தை உருவாக்க எங்கள் முயற்சிகளைத் நாங்கள் தொடருவோம் என்று ஜோ பைடன் தனியார் செய்தி நிறுவன பேட்டியில் குறிப்பிட்டார்.