அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் முயற்சியில் ரஷ்யா.? அமெரிக்க அதிபர் வேதனை.!

அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேதனை தெரிவித்துள்ளார் .

ரஷ்யா , அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு வருடம் கடந்து விட்டது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதில் அமெரிக்கா ரஷ்ய மீது கடும் கண்டங்களை வெளிப்படையாகவே பதிவு செய்து வருகிறது.

ஜோ பைடன் கவலை :

ரஷ்யா, ஐரோப்பிய நாடான பெலாரஸில் அணு ஆயுதங்களை நிறுத்தி வைக்க போவதாக அறிவித்து இருந்தது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்கள் :

அண்டை நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யாவின் முடிவானது மிகவும் ஆபத்தான முடிவு எனவும் பைடன் விமர்சனம் செய்துள்ளார். இருப்பினும் இன்னும் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார் .

Leave a Comment