ரயில் ஓட்டுநர்கள் பணிநேரத்தின்போது புகையிலை உட்கொள்ளக்கூடாது! – வடக்கு மத்திய ரயில்வே செய்தி தொடர்பாளர்

ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட்கள், தங்கள் பணிநேரத்தின்போது பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்ளக்கூடாது என அறிவிப்பு.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது. அதன் பின், தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடைபெற்று  வருகிறது. ரயில் விபத்துக்களை தடுக்க உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில்,  ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட்கள், தங்கள் பணிநேரத்தின்போது பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்ளக்கூடாது என வடக்கு மத்திய ரயில்வேயின் பிரயக்ராஜ் கோட்டம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களை உட்கொள்வதால் லோகோ பைலட்களின் கவனம் சிதற வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.