இன்றைய ராசி பலன்கள்! உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்.!

Today horoscope -மாசி மாதம் 28ஆம் தேதி [மார்ச் 11, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்றைய நாள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணம் செல்லலாம். இன்று பணி சுமை அதிகமாக இருக்கும். சொத்து வாங்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை .அதிஷ்ட எண் 2 ,அதிஷ்ட வண்ணம் சிவப்பு.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் உயர்வு ஏற்படலாம், தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும் .குடும்ப வாழ்க்கையில் சச்சரவுகள் ஏற்படலாம். பேச்சில் கவனம் தேவை. பொருளாதாரத்தில் லாபம் ஏற்படும். அதிஷ்ட எண் 1, அதிஷ்ட நிறம் மாணிக்க வண்ணம்.

மிதுனம்:

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். இன்று தானம் ,தர்மம் செய்வது நல்லது. உங்கள் துணையின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட எண் இரண்டு, அதிர்ஷ்ட வண்ணம் முத்து வண்ணம்.

கடகம்:

இன்று திடீர் பணவரவு ஏற்படும். மேல் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படலாம், பொறுமையை கையாளுவது அவசியம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. புதிய நபர்களிடம் அதிகம் பேச வேண்டாம். அதிர்ஷ்ட எண் ஒன்று, அதிர்ஷ்ட நிறம் மாணிக்க வண்ணம்.

சிம்மம்:

இன்று புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையைப் பற்றி மற்ற பிற மனிதர்களிடம் பேசாதீர்கள். பேசுவதில் கவனம் தேவை. நண்பர்கள் பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டன் எண் மூன்று, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

கன்னி:

இன்று உங்களுக்கு அற்புதமான நாள் .பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தோல் பிரச்சனை மற்றும் வயிறு தொந்தரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிஷ்ட எண் 4, அதிர்ஷ்ட வண்ணம் பாக்கு வண்ணம். இன்று நீங்கள் மீனாட்சி வழிபாடு செய்யவும்.

துலாம்:

இன்று நினைத்த காரியம் வெற்றி பெறும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். காகத்திற்கு உணவு அளிப்பது நல்லது .அதிர்ஷ்ட எண் 6 ,அதிர்ஷ்ட வண்ணம் பட்டு வெள்ளை.

விருச்சிகம்:

இன்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும், பணவரவு ஏற்படும் .அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும் . சக பணியாளர்களின் தொந்தரவு ஏற்படும். இன்று எண்ணெய் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட எண் இரண்டு ,அதிஷ்ட நிறம் முத்து.

தனுசு:

இன்று உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும். புதிய வீடு கட்ட வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்ட எண் 1 ,அதிர்ஷ்ட வண்ணம் மாணிக்க வண்ணம்.

மகரம்:

இன்று நிலுவையில் உள்ள பணம் உங்கள் கைக்கு கிடைக்கும். திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பிற்காக பிறரிடம் பணம் கொடுக்க வேண்டாம் .விநாயகரை வழிபாடு செய்வது நல்லது .அதிர்ஷ்ட எண் ஒன்று, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

கும்பம்:

பேச்சில் கவனம் செலுத்தவும் ,ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,குடும்பத்தில் சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது .உங்கள் கடனை அடைக்க இன்று வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட எண் 5 ,அதிஷ்ட வண்ணம் மரகத வண்ணம்.

மீனம்:

இன்று நீங்கள் அன்னதானம் செய்வது நல்லது இதனால் பல பிரச்சனைகள் விலகும் . குடை தானம் கூட செய்யலாம். சாகச பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும் .அதிர்ஷ்ட எண் 9 ,அதிஷ்ட நிறம் பவளவண்ணம் .

Leave a Comment