Today’s Live : தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்..! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் :

2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Readmore : #BREAKING: மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2023-02-27 06:10 PM
அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் :

டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,“வேங்கை வயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் ராணுவ வீரரான பாண்டியனை தூண்டிவிடும் அளவுக்கு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்” என்றும் கூறினார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், பாஜக தொடர்ந்து செயல்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

2023-02-27 05:20 PM
மதுக்கொள்கை விவகாரம் :

டெல்லி மதுக்கொள்கை விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

Readmore : மணீஷ் சிசோடியா கைது… ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் போராட்டம்!

2023-02-27 03:26 PM
எடியூரப்பாவின் 80வது பிறந்தநாள் :

இன்று தனது 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிஎஸ் எடியூரப்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். முன்னாள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க மக்கள் தங்கள் மொபைல் போன்களின் டார்ச்சை ஒளிரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

2023-02-27 02:15 PM
ஈரோடு கிழக்கு தொகுதி :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில வாக்குச்சாவடிகள் அருகே பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அதிமுக, திமுக இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Readmore : ஈரோடு கிழக்கில் அதிமுக – திமுக இடையே தள்ளுமுள்ளு!

2023-02-27 1:54 PM
நடிகை தாக்கப்பட்ட வழக்கு :

2017ஆம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கில் முதன்மை குற்றவாளியான பல்சர் சுனி என்று அழைக்கப்படும் சுனில் என்எஸ் ஜாமீன் மனு மீதான உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

2023-02-27 01:15 PM
மதுரை எய்ம்ஸ் :

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில், மதுரையில் அமையவிருக்கும் கட்டிடத்திற்கு மட்டும் 1%-க்கும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.1977.8 கோடி மதிப்பிலான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, இதுவரை ரூ.12.32 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

Readmore : மதுரை எய்ம்ஸ்: 1%-க்கும் குறைவான நிதி ஒதுக்கீடு – RTI அறிக்கையில் அம்பலம்!

2023-02-27 12:40 PM
ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் :

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஃபேர்மாண்ட் செஞ்சுரி பிளாசாவில் 29வது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் இந்த ஆண்டின் சிறந்த நடிப்பு நிகழ்ச்சிகளைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது. இதில் ‘எவ்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ என்ற திரைப்படத்தில் வேமண்ட் வாங் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் கே ஹுய் குவான் பெற்றார்.

[Image Source : ANI]
2023-02-27 12:00 PM
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை:

இந்த வாரம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர், G20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

2023-02-27 11:00 AM
உண்மை வெளிவரும் வரை ஓய மாட்டோம் :

ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி,”அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை ஓய மாட்டோம், கேள்விகள் எழுப்புவோம். அதானியின் நிறுவனங்கள் நாட்டை காயப்படுத்துகின்றன; நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பறித்துக்கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.

2023-02-27 10:35 AM

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

6 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

6 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

12 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

12 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

13 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

13 hours ago