Today’s Live : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.!

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

05.04.2023 5:20 PM

பாஜகவுக்கு எனது ஆதரவு:

கர்நாடகாவில் மே10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரபல நடிகர் சுதீப் பாஜகவுக்கு தனது ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளார். பெங்களூருவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், “மரியாதைக்குரிய முதல்வருக்கு எனது ஆதரவை அளிக்கிறேன்” என அறிவித்தார். இதற்கு பதிலளித்து முதல்வர், ‘அவர் எனக்கு அளித்த ஆதரவு என்பது கட்சியை (பாஜக) ஆதரிப்பதாக அர்த்தம்” என குறிப்பிட்டார்.

05.04.2023 3:30 PM

5 நாட்கள் தனிமை :

கொரோனா தொற்று ஏற்பட்டால் 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். காய்ச்சல், தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடித்து கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

05.04.2023 1:55 PM

கொரோனா பரவல் :

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களும் மெல்ல முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காணொலியில் ஆஜராகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராக விரும்பினால் ஏற்பாடு செய்து தரப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

05.04.2023 1:10 PM

சுதந்திரமான பத்திரிகைகள் அவசியம் :

கேரளாவின் மீடியா ஒன் தனியார் தொலைக்காட்சி முடக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வலுவான ஜனநாயகம் அமைய சுதந்திரமான பத்திரிகைகள் அவசியம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மீடியா ஒன் மறு புதுப்பித்தலுக்கு அனுமதி மறுத்த தகவல் ஒலிபரப்புத்துறையின் உத்தரவை ரத்து செய்து அரசின் கொள்கைகள் மீதான விமர்சனத்தை சட்டப்படி எந்த காரணத்திற்காகவும் கட்டுப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

05.04.2023 12:30 PM

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு:

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி இயந்திரங்களில் அதிக சப்தத்துடன் புகை வெளியேறியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி மேடைக்கு வந்தவுடன் தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது ஏசி இயந்திரங்களில் அடுத்தடுத்து திடீரென கேஸ் வெளியேறியது. ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென ஏ.சி.யில் இருந்து புகை வந்ததை கண்டு பதற்றமடைந்த மாணவர்கள் உடனே வேறு பகுதிக்கு நகர்ந்தனர், பின்னர் ஏசி இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு, நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

05.04.2023 12:15 PM

தேர்தலில் போட்டியிட பாஜகவில் ஆள் இல்லை :

கர்நாடக தேர்தலில் போட்டியிட பாஜகவில் ஆள் இல்லை என காங்கிரஸ் எம்.பி.ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் காங்கிரஸ்க்கு தாவி வருகின்றனர். பாஜகவில் இருப்பவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல் திணறி வருகின்றனர்’ என்றார். கர்நாடகாவில் மே 10ல் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

05.04.2023 11:30 AM

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை :

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் மீது அமலாக்க இயக்குனரகம் கூடுதல் புகார் அளித்துள்ளது.

05.04.2023 10:45 AM

பாஜக எம்.பி கைது :

தெலுங்கானாவில் மாநில பாஜக தலைவரும், எம்பியுமான பாண்டி சஞ்சய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பொம்மலா ராமரம் காவல் நிலையம் முன்பு பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.

05.04.2023 10:15 AM

Leave a Comment