Today’s Live: சூடான் ராணுவ மோதல்..! இந்தியர்கள் உள்பட 150 பேர் மீட்பு..!

150 பேர் மீட்பு :

சூடானில் ராணுவ மற்றும் துணை ராணுவத்திற்கிடையே மோதல் வெடித்து பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பலரும் சூடானில் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், இந்தியர்கள் உள்பட 150 பேரை சவுதி அரேபியா மீட்டு வந்துள்ளது. சூடானில் தவிக்கும் இந்தியர்களை அங்கிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

23.04.2023 12:30 PM

தீப்பற்றி எரிந்த ரயில் பெட்டிகள்:

மத்தியப் பிரதேசம் மாநிலம், ரத்லம்-டாக்டர் அம்பேத்கர் நகர் டெமு ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் மேற்கு ரயில்வேயின் ரட்லான் பிரிவு மக்கள் தொடர்பு அதிகாரி கேம்ராஜ் மீனா தெரிவித்தார்.

23.04.2023 11:50 AM

மு.க.ஸ்டாலின் பேச்சு:

இந்தியாவை காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாட்டை காப்பாற்ற நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே, நாட்டை காப்பாற்றும் பணியில் திமுகவின் ஒவ்வொரு தொண்டனும் ஈடுபடவும், நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கோண்டு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்தார்.

23.04.2023 11:10 AM

அதிமுகவில் இணைந்த அமமுக செயலாளர்:

அமமுக பொருளாளரும், திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளருமான ஆர்.மனோகரன் கட்சியில் இருந்து விலகி சற்று நேரத்திலேயே சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

RManoharan
RManoharan

23.04.2023 10:35 AM

வாட்டர் மெட்ரோ:

கேரளாவில் ஏப்ரல் 25ம் தேதி, இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோவை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். வாட்டர் மெட்ரோ என்பது ஒரு தனித்துவமான நகர்ப்புற வெகுஜன போக்குவரத்து அமைப்பாகும், இது வழக்கமான மெட்ரோ அமைப்பைப் போலவே அதே அனுபவம் மற்றும் பயணத்தை எளிதாக்குகிறது. கொச்சி போன்ற நகரங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Water Metro
Water Metro [Image Source : ANI]

23.04.2023 10:15 AM

Leave a Comment