இன்றைய நாள் (04.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய நாள் ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நடப்பவை நல்லதாக நடக்கும். உங்களின் தன்நம்பிக்கை உங்களை வெற்றியின் அருகில் நிலைநிறுத்தும்.

ரிஷபம் : கவனமாக செயல்பட்டால் எதிர்மறை விளைவுகளை தடுக்கலாம்.  இலட்சியத்தை அடைய காலதாமதம் ஆகும். பொறுமையாக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

மிதுனம் : இன்றைய இலக்குகள் குறைவாக இருக்கும். அதனை அடைய சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். 

கடகம் : முன்னேற்றத்திற்கான நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று சமநிலையான நாள். இன்று எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். அமைதியை கடைபிடியுங்கள். 

சிம்மம் : நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் இன்று கிடைக்காது. சிந்தித்து முடிவைகளை எடுத்தால் நல்லது நடக்கும்.  எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். இன்றைய நாள தன்நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.

கன்னி : பதட்டமான மனநிலையோடு காணப்படுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபட்டால் இன்றைய நாளை கடந்து செல்ல உதவும்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும்.

விருச்சிகம் : இன்று மனஉறுதியுள்ள நாள். தன்நம்பிக்கையோடு எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்கும். நீங்கள் இன்று மனஉறுதியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.

தனுசு : இலக்கை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு  நல்ல பலனை தரும்.

மகரம் : வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய  நாள்.  உங்கள் பாதையில் தடைகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். 

கும்பம் : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திட வேண்டும். உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மீனம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை எளிதாக வென்று முடிப்பீர்கள். வளர்ச்சியுள்ள நாள். நீங்கள் விரும்பியது நடக்கும்.