பள்ளிக்கல்வி துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக்.! சினிமா காட்சிகளை பதிவேற்றிய விஷமிகள்

TNDPI: தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி துறை பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்ட நிலையில் திரைப்பட படங்களின் காட்சிகளை விஷமிகள் அதில் பதிவேற்றம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு என அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் இதை 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர்.

Read More – பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு! தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதில் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த தகவல்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு தகவல்கள், பள்ளி பாடம் தொடர்பான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று தமிழக பள்ளிக் கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. மேலும், ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் 10-க்கும் மேற்பட்ட திரைப்பட வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்து முடக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா காட்சிகள் பதிவேற்றப்பட்டிருப்பதைக் கண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

Read More – திருச்சியில் சிக்கிய 100 கிலோ ஹாஷிஷ் போதைப்பொருள்.. 876 கிலோ கஞ்சா.!

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது குறித்து மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment