தமிழ்நாடு

நீட் தேர்வு முறைகேடுகள்… சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நாளில் நீட் தேர்வுக்கு எதிராக முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அவ்வப்போது முன்னெடுத்து வருகிறது.

அதே, வேளையில், அண்மையில் நிகழ்ந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட முறைகேடுகள் இந்தியா முழுக்க நீட் தேர்வு பற்றிய சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பையும் உருவாகியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், பல்வேறு தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு மைய கண்காணிப்பாளரே விடைத்தாள் நிரப்புவது உள்ளிட்ட புகார்கள் நீட் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முதலில் இந்த குற்றசாட்டுகளை மறுத்த மத்திய அரசு, பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு, போட்டித்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு மைய (NTA) தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.  பின்னர், நீதிமன்றம் தலையிட்டு இந்த முறைகேடுகளை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

நீட் தேர்வுக்கு எதிராக தனியாக தமிழ்நாடு குரல் எழுப்பி வந்த நிலையில், தற்போது அது இந்தியாவின் குரலாக மாறியுள்ளது. மாநில அரசுகளே மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும் பழைய நிலையை மீண்டும் கொண்டுவர மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர் என குறிப்பிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் வாசிக்கையில், கிராமப்புற மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவுகளை கடுமையாக பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறிக்கும்செயலை மத்திய அரசு நிறுத்த வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்துதர வேண்டும் என தீர்மானம் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் பின்னர் முதல்வர் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

Recent Posts

பிரிட்டன் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்திய வம்சாவளியினர்…

UK தேர்தல்:  பிரிட்டன் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி 7 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். 650 இடங்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று…

32 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல் ..ஸ்ருதியின் அம்மாவால் தெரியவரும் உண்மைகள்..!

சிறகடிக்க ஆசை இன்று -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [ஜூலை 5] கதைக்களத்தை இங்கே காணலாம். ரவியும் ஸ்ருதியும் கேக்கோட வீட்டுக்குள்ள…

45 mins ago

முந்துங்கள் வருங்கால வங்கி ஊழியர்களே …! UCO வங்கியில் அப்ரண்டிஸ் வேலை ..!

UCO வங்கி : யுனைடெட் கமர்ஷியல் வங்கி லிமிடெட் (UCO) வங்கியில் அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 544…

1 hour ago

நல்லா நோட் பண்ணிக்கோங்க மக்களே! நாளை இந்த இடங்களில் மின்தடை!

மின்தடை  : நாளை ( ஜூலை 6 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். தென் சென்னை - ஐய்யப்பன்தாங்கல் காட்டுப்பாக்கம்,…

1 hour ago

எடப்பாடி பழனிச்சாமி ஓர் நம்பிக்கை துரோகி.? அண்ணாமலை கடும் தாக்கு.!

விழுப்புரம்: நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு பொருத்தமாக இருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.. இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

2 hours ago

ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா.. கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி.!

குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் 'குபேரா' படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர்.…

2 hours ago