இந்தோனேசியாவில் ரயில் விபத்து! 3 பேர் பலி…28 பேர் காயம்!

இந்தோனேசியாவில் இருக்கும் முக்கிய தீவுகளில் ஒன்றான ஜாவா தீவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில்  3 பேர் உயிரிழந்தனர்.  குறைந்தது 28 பேர் காயமடைந்தனர் என்று அங்கிருந்த  அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்தனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிகாலெங்காவில் உள்ள நெல் வயல்களுக்கு அருகில் உள்ளூர் நேரப்படி காலை 6:03 மணிக்கு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.  கிழக்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரான சுரபயாவிலிருந்து பாண்டுங் நோக்கிப் பயணித்த துரங்கா விரைவு ரயில், சிகலெங்கா நிலையத்திலிருந்து படலராங் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டது.

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் ட்ரோன் தாக்குதலில் மரணம்!

இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  28 பேர் காயமடைந்தனர்  காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மேலும், இந்த விபத்து சம்பவத்தால் ரயில் தண்டவாளத்தில் இருந்து பல பெட்டிகள் தடம் புரண்டது.

இது குறித்து மீட்பு நிறுவனத்தின் தலைவர் ஹெரி மராந்திகா பேசியதாவது ” மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரத்தில் உள்ள சிகாலெங்கா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் (கெஜம்) தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது.  இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 106 பேரும், துரங்காவில் பயணம் செய்த 54 பேரும் மீட்கப்பட்டார்கள். இன்னும் மீட்பு பணி நடந்து வருகிறது.