இதற்காவே CSK அணியுடன் விளையாட விரும்புகிறேன் – கவாஸ்கர்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ள விருப்பம் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிறந்த பேட்டர்களில் ஒருவரான சுனில் கவாஸ்கர், டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பே ஓய்வு பெற்றார். இருப்பினும், T20 விளையாட்டை விளையாடவில்லை என்றாலும், 73 வயதான அவர் எப்போதும் ஒரு நிபுணராக விளையாட்டிற்கு அருகாமையில் இருந்து குரல் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அதன் 16வது ஆண்டை நிறைவு செய்தது. அதில் கலந்து கொண்ட சுனில் கவாஸ்கர் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். அவரிடம், மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் எந்த அணிகளுக்காக விளையாடியிருப்பார் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கவாஸ்கர், மும்பை இந்தியன்ஸ், இல்லையென்றால், நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு காரணங்களுக்காக சொல்கிறேன். பெரிய காரணம் என்னெவென்றால், எம்எஸ் தோனியுடன் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து அவர் எப்படி அணிக்கு கேப்டனாக இருக்கிறார் என்று பார்ப்பதற்கு ஆசைப்படுகிறேன். மேலும், மைதானத்தில் யாரேனும் ஒரு கேட்சை கைவிட்டாலோ அல்லது பீல்டிங் சரியாக செய்கிறார்களா இல்லையா என்பதை தோனி எவ்வாறு கையாளுகிறார் என்பதை அறிய நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது, நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. சில தவறுகள் மற்றும் வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினாலும் சிறப்பாக முன்னேறி வருகிறது. 41 வயதிலும் தோனி இன்னும் பலமாக இருக்கிறார், அவர் ஐபிஎல் 2023-ல் அணியை சிறப்பாக வழிநடத்தி வருவது மட்டும்மல்லாமல்,  பேட்டிங்கிலும் சிறப்பாக பங்களித்துள்ளார்.

Leave a Comment