இதுதான் விஜய் சேதுபதிக்கு அதிக வசூலா.!? அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் ஏப்ரல் 28-ஆம்  திரையரங்குகளில் வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். ஜாலியான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

ஏப்ரல் 28-ஆம்  தேதி வெளியான இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் மிகவும்  அருமையாக இருந்ததாக தெரிவித்து வந்தனர். படம் வெளியாகி 1 மாதம் ஆக போகும் நிலையில், இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை,  உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது. அதன்படி , இந்த படம் உலகம் முழுவதும் 66 கோடி வசூல் செய்துள்ளது. இது தான் விஜய் சேதுபதிக்கு அதிக வசூல் கொடுத்த படம் என்றும் சில கூறிவருகிறார்கள். ஆனால், இதற்கு முன்பு 96 படம் 80 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment