#Rain Alert ! இந்த மாவட்டங்களில் காலை 10 மணி முதல் கனமழை இருக்கும்

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய தமிழகத்தின் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image