உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்; ஜப்பானை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம்;

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் வெளியிட்டுள்ள பாஸ்போர்ட் கணக்கீட்டின்படி, உலகம் முழுவதும் உள்ள 227 நாடுகளில் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் அணுகலுடன் சிங்கப்பூர் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்டுள்ளது. 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் படி ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் ஜப்பான் முதன்முறையாக முதலிடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு கீழிறங்கி உள்ளது. இது 189 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ள வழிவகுக்கிறது. 3ஆம் இடத்தில் ஜப்பானுடன் ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பெர்க், தென் கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பகிர்ந்துள்ளன.