ஒடிசா விபத்தில் ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்!

எங்கள் வாழ்நாளில் இவ்வளவு பேர் விபத்தில் உயிரிழந்ததை பார்த்ததில்லை என்று தீயணைப்பு துறை தலைமை அதிகாரி வேதனை.

ஒடிசா பால்சோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில மீட்பு படை மற்றும் ராணுவ குழுக்கள் உள்ளிட்ட பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பயணங்கள் மீட்பு பணி நிறைவடைந்து, மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஒடிசா விபத்தில் ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒடிசா தீயணைப்பு துறை தலைமை அதிகாரி சுதன்ஷு, ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்த கிரேன் வந்துள்ளது. இடிபாடுகளில் யாரும் சிக்கியிருக்க மாட்டார்கள் என நம்புகிறோம். நாங்கள் மனமுடைந்து போய் உள்ளோம். எங்கள் வாழ்நாளில் இவ்வளவு பேர் விபத்தில் உயிரிழந்ததை பார்த்ததில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.