வாழவே விட மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு! – சு.வெங்கடேசன் எம்.பி

வாழவே விட மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு என மின்கட்டண உயர்வு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும்,  மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘1… 2… 28 முறை அரசு மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ஒன்றிய அரசின் மானியங்கள் கிடைக்காது என கண்டிப்போடு 28 முறை கடிதங்கள் வந்தன – அமைச்சர் செந்தில் பாலாஜி. வாழவே விட மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு! மாநிலங்களின் ஒன்றுபட்ட குரல் தேவை.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment