இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிப்பதாக, இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க  வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது!

தொழில்நுட்பமும், நாகரிகமும் அதிகரித்து விட்ட நிலையில் குக்கிராமங்களில் கூட வணிக முத்திரையற்ற உணவுப் பொருட்கள் பொட்டலத்தில் அடைக்கப்பட்டு தான் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு 5% வரி விதிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் பணவீக்கம் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், பிற அத்தியாவசியத் தேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டால் அது பணவீக்கமும், அதன் விளைவாக விலைவாசியும் கடுமையாக அதிகரிக்கும்; மக்கள் பாதிக்கப்படுவார்கள்!. மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கக் கூடாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்!’ என்றும் பதிவிட்டுள்ளார்.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

10 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

13 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

13 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

41 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago