குடிநீர் பிரச்சனையை மாநில அரசே பூர்த்தி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவற்றின் நோக்கம் மற்றும் திட்டங்கள் குறித்த வளர்ச்சியை பற்றி பேசிய பிரதமர் மோடி.

மத்திய பட்ஜெட் மற்றும் இந்தியாவின் கிராமங்கள் எவ்வாறு வேகமாக வளரும் என்பதைப் பற்றி காணொலியில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் குடிநீர் தேவையை மாநில அரசுகள் பூர்த்தி செய்ய வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 4 கோடி குடிநீர் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். குடிமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 7 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கழிவறை, மின்சாரம் ஆகியவை தரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பட்ஜெட், கிராமப்புற வளர்ச்சிக்கும், கிராமங்களில் முறையான உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பட்ஜெட் அறிவிப்புகள், கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான இடப்பற்றாக்குறை மற்றும் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும். வளரும் கிராமங்களுக்கு, வீடுகள் மற்றும் அதன் நிலங்களின் சரியான எல்லை நிர்ணயிப்பது அவசியம். சுவாமித்வா யோஜனா இதை எளிதாக்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 40 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.