ஒடிசா ரயில் விபத்து : அனைத்து ரயில் நிலையங்களுக்கும் புதிய உத்தரவு.! 14ஆம் தேதி கடைசி….

ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. 

ஒடிசா ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் விபத்தில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து , நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், சிக்னல் கருவிகள், லாக்கிங் கருவிகள் என அனைத்தும் சரியாக இருக்கிறதா, வேலை செய்கிறதா என்று ஒருவாரம் தொடர்ந்து அதனை சோதனை செய்ய வேண்டும். அதில் ஏதேனும் கோளாறு இருந்தால் வரும் 14ஆம் தேத்திக்குள் அதனை ரயில்வே வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் குறிப்பிட்டுள்ளது.