தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ்-க்கு எதிரான மனு.! பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்க கூடாது.!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக ஏற்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டார்.

ஓபிஎஸ் மனு தள்ளுபடி :

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுசெயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் மனு :

இந்த மேல்முறையீடு விசாரணை நடைபெற்று வரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்துள்ளார்.

பொதுச்செயலாளர் இபிஎஸ் :

அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும், அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறி எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment