மும்பை தாக்குதல் நினைவு இருக்கிறதா.? சீமா நாடு திரும்பவில்லை என்றால்.., மும்பை போலீசாருக்கு உருது மொழியில் மிரட்டல்.!

பாகிஸ்தானை சேர்ந்த பெண் நாடு திரும்பவில்லை என்றால் தாக்குதல் நடத்தப்படும் என உருது மொழியில் மும்பை போலீசாருக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சீமா ஹைதர் எனும் திருமணமான பாகிஸ்தான் பெண், பப்ஜி எனும் ஆன்லைன் விளையாட்டில், இந்தியாவை சேர்ந்த சச்சின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சேர்ந்துவ வாழ தனது குழந்தைகளுடன் கடந்த 2019ஆம் ஆண்டு நேபாளம் வழியாக விசா இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ந்துவிட்டார். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக சீமா மற்றும் அடைக்கலம் கொடுத்ததற்காக சச்சினும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதலையான பிறகு, சச்சினும் சீமாவும் தனது குழந்தைகளுடன் சேர்ந்து வாழ உத்திர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதிக்கு வந்தனர். இருவரும் நேபாளத்தில் திருமணம் செய்து கொண்டதாக சச்சின் பெற்றோரிடம் கூறினர்.

இந்நிலையில், இந்த சம்பவங்கள் எதுவும் தெரியாமல் சவூதி அரேபியாவில் வேலைக்கு சென்றிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சீமா கணவர் குலாம் ஹைதர், நாடு திரும்பிய பின்னர், தனது மனைவியுடன் மீண்டும் இணைய உதவுமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி இருந்தார்.

இந்த சம்பவங்களை அடுத்து தற்போது மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத ஒருவர் உருது மொழியில் (இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் மொழி) அழைப்பு வந்துள்ளது. அதில், 26 நவம்பர் 2008 மும்பை தாக்குதல் நினைவிருக்கிறதா.? தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்பவில்லை என்றால், இந்தியா “அழிவை சந்திக்கும்” என அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

26/11 மும்பை பயங்கரவாத சம்பவம் போன்ற தாக்குதலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும், அதற்கு உத்தரபிரதேச அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பெறப்பட்ட அழைப்பு தொடர்பாக உடனடி விசாரணையை மும்பை போலீசார் துவங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மும்பை போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி இதுபோன்ற அழைப்புகள் வந்தாலும், போலீசார் தற்போது இது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

2008ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பை பகுதியில் பல்வேறு இடங்களில் தற்கொலைபடை தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த தாக்குதலில் 175 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.