தமிழ்நாட்டில் குடிசையில்லா மாநிலங்களை உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.! 

தமிழகத்தில் குடிசையில்லா நகரங்களை உருவாக்க அரசு முயற்சி செய்து வருகிறது எனவும், திராவிட மாடல் ஆட்சியின் இலக்குகள் பெரியதாக இருப்பதால் அதற்கான முயற்சிகளும் பெரிய அளவாக இருக்கிறது. – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் வீடு, மனை விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்  பின்னர் அவர் விழா மேடையில் பேசுகையில் தமிழகத்தில் குடிசை மாற்று திட்டம் பற்றியும், நடவடிக்கைகள் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார்.

முன்மாதிரி மாநிலம் : அதில், குடிசையில்லா நகரங்களை உருவாக்க நாட்டிலேயே முதல் முயற்சி எடுத்தது தமிழ்நாடு தான் பெருமையாக கூறினார். மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என தமிழகம் பாராட்டுகளை பெற்று  வருகிறது என குறிப்பிட்டார்.

திராவிட மாடல் : எல்லோருக்கும் எல்லாம் என்கிற வகையில் கொள்கைகளை தீட்டி செயல்படுத்தி வருகிறோம் எனவும், தமிழகத்தில் குடிசையில்லா நகரங்களை உருவாக்க அரசு முயற்சி செய்து வருகிறது எனவும், திராவிட மாடல் ஆட்சியின் இலக்குகள் பெரியதாக இருப்பதால் அதற்கான முயற்சிகளும் பெரிய அளவாக இருக்கிறது என முதல்வர் அந்த மேடையில் பேசினார்.

வீடு வசதி வழங்கும் திட்டம் : மேலும், தமிழகத்தில், கல்வி சுற்றுச்சூழல் பெண்கள் முன்னேற்றம் என அனைத்து துறைகளிலும் நமது அரசு கவனம் செலுத்தி வருகிறது.  அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரி மாநிலமாக தமிழ்நாடு பாராட்டுகளை பெற்று வருகிறது எனவும்,  குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வீடு வசதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த விழாவில் பேசினார்.

Leave a Comment