மகளுக்கு வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் விருந்து கொடுத்த தந்தை!

பொதுவாக கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுப் பொருள் தான் ஞாபகத்துக்கு வரும். அந்த வகையில் ஒரு தந்தை தனது மகளுக்கு கிறிஸ்மஸ் விருந்தை வித்தியாசமான முறையில் வழங்கியுள்ளார்.

பொதுவாக கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுப் பொருள் தான் ஞாபகத்துக்கு வரும். அந்த வகையில் ஒரு தந்தை தனது மகனுக்கு கிறிஸ்மஸ் விருந்தை வித்தியாசமான முறையில் வழங்கியுள்ளார். ரே லிட்டெலே என்னும் 49 வயதான ஒருவர் தனது 7 வயது மகள் ஜாஸ்மினுக்கு கிறிஸ்துமஸ் விருந்து கொடுக்க விரும்பியுள்ளார்.

பெரியதாக ஊதப்பட்ட, 35 அடி உயரமுள்ள க்ரிஞ்ச் பரிசாக கொடுத்துள்ளார். இந்த கிரிஞ்ச் ஊதப்பட்ட பின் வீட்டை விட உயரமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை பார்க்கும்போது நிச்சயமாக பண்டிகை காலத்தில் ஒரு சிறப்பாக இருக்கும் என்று கருதினார். மேலும் இது ஒட்டகச்சிவிங்கியை விட உயரமாக காணப்படுகிறது.

 இதனை ஊதிய நபருக்கு லிட்டில் 500 டாலர் சம்பளமாக கொடுத்துள்ளார். கிரிஞ்சை பார்ப்பதற்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள நபர்கள் அனைவரும் அவரது வீட்டை தேடி  வந்துள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், கிரிஞ்சுடன் தங்கள் புகைப்படங்களை எடுக்க எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் வருகிறார்கள்.  பார்க்க வந்த எல்லோரும் சமூக ரீதியாக தொலைவில் இருப்பது உறுதி செய்தேன். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன் என தெரிவித்துள்ளார். சில நாட்கள் கழிந்த பின் இந்தக்  கிரிஞ்சை பார்க்க வரும் நபர்களிடம் சிறிதளவு பணத்தை நன்கொடையாக வாங்கியுள்ளார். இதன்  மூலம் அவர், பத்தாயிரம் டாலருக்கும் அதிகமான தொகையை திரட்டியுள்ளார்.