தமிழக என்று உச்சரித்து மன்னிப்பு கேட்ட முதல்வர்..!

நான் ஒவ்வொரு நாளும் உதயநிதியை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என முதல்வர் பேச்சு. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை அறிவாலயத்தில் திமுக இளைஞரணி செயலியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று பேசிய முதல்வர் அவர்கள் தமிழக என்று உச்சரித்து மன்னியுங்கள் தமிழ்நாட்டினுடைய இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், நான் இப்பொழுது பிறந்த வீட்டிற்கு வந்துள்ளேன். பிறந்த வீட்டிற்கு மட்டுமல்லாது வளர்த்த வீட்டிற்கும், வளர்ந்து கொண்டிருக்கின்ற வீட்டிற்கு வந்துள்ளேன்.

திராவிட மாடல் பயிற்சி பாசறை எழுச்சியோடு இளைஞரணி அமைப்பு நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில், உதயநிதியின் தந்தையாக இருந்து மகிழ்ச்சி அடைகிறேன். அதே சமயம் உதயநிதியின் தலைவனாக இருந்து பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இளைஞர் அணியில் நான் பதவியேற்று மூன்று வருடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக இளைஞரணி சம்பந்தமான நிகழ்ச்சியில்  பங்கேற்றுள்ளார்என்று தெரிவித்தார். ஆனால் அவர் ஏன் என்னை மூன்று வருடங்களும் எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை என கலகலப்பாக கூறினார்.

ஒருவேளை  எனக்கு பல்வேறு பொறுப்புகள் இருக்கிறது என்று கருதியும் எனக்கு இடையூறு தரக்கூடாது என்று எண்ணி இருப்பார் என்று நான் எண்ணிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார். மேலும், நான் ஒவ்வொரு நாளும் உதயநிதியைகண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment