இந்தியாவின் 78வது கிராண்ட்மாஸ்டர், கொல்கத்தாவைச் சேர்ந்த கவுஸ்டாவ் சட்டர்ஜி

கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான கவுஸ்டாவ் சட்டர்ஜி இந்தியாவின் 78வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த பத்தொன்பது வயதான செஸ் வீரர் கவுஸ்டாவ் சாட்டர்ஜி, இந்தியாவின் 78வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். மேலும் இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, இந்தியாவின் 10-வது கிராண்ட்மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நடந்த 59வது தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப்பின் 10-வது சுற்றில், கிராண்ட்மாஸ்டர் மித்ரபா குஹாவுடன் போட்டியை ட்ரா செய்து, இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றிருக்கிறார். அக்டோபர் 2021 இல் வங்கதேசத்தில் நடந்த கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், கவுஸ்டாவ் தனது முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.

நவம்பர் 2022 முதல் வாரத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் கவுஸ்டாவ், தனது இரண்டாவது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.

Leave a Comment