ஆளுநர் தமிழிசைக்கு எதிராக வழக்கு.! 3 மசோதாக்கல்களுக்கு உடனடி ஒப்புதல்.!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நேற்று அம்மாநில அரசு தாக்கல் செய்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளர். 

தமிழகத்தை போலவே பாஜக ஆட்சி அல்லது அவர்கள் ஆதரவு ஆட்சி இல்லாத மாநிலங்களில் அந்தெந்த மாநில ஆளுநர்களுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் இடையே முரண்பாடுகள் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. நேற்று தமிழக அரசு, சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தில் மனு :

அதுபோல, தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசைக்கு எதிராக, அம்மாநில அரசு,  ஆளுநர் தமிழிசை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க மறுக்கிறார் என்று குற்றம்சாட்டி அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு விசாரணைகள் இன்று விசாரிக்க இருந்த நிலையில், நேற்று ஆளுநர் தமிழிசை 3 சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

தமிழிசை ஒப்புதல் :

இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு வழக்கறிஞர் இதனை குறிப்பிட்டு இருந்தார். அதில் , தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார் என்றும், இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், மூன்று மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment