தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள 8 மண்டலங்கள் இவைதான்.!

மத்திய அரசின் 5ஆம் கட்ட ஊரடங்கு நெறிமுறைகளின் படி, தமிழத்தில் 5ஆம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மண்டலங்களுக்குள் செல்ல இ பாஸ் அவசியமில்லை. ஆனால் மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ பாஸ் அவசியம். மேலும், மண்டலங்களுக்கு இடையேயான பொதுபோக்குவரத்துக்கும் தடை தொடர்கிறது. 

தமிகத்தில் பிரிக்கப்பட்ட அந்த 8 மண்டலங்கள் :

மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சிமண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.

மண்டலம் 7 மற்றும் 8 இல் பொதுப்போக்குவரத்திற்கான தடை தொடர்கிறது. மற்ற மண்டலங்களில் 50 சதேவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்கும். குறிப்பிட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.