மீண்டும் ஓர் உழைப்பாளர் பேரெழுச்சியை காணப் போகிறது தமிழ்நாடு – டிடிவி

மீண்டும் ஓர் உழைப்பாளர் பேரெழுச்சியை காணப் போகிறது தமிழ்நாடு என டிடிவி தினகரன் ட்வீட். 

தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

மீண்டும் ஓர் உழைப்பாளர் பேரெழுச்சி

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது பக்கத்தில், ‘தொழில் நிறுவனங்களில் 12 மணிநேர வேலை மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

மனித இரத்தத்தை வியர்வையாய் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாக தொழில் நிறுவனங்கள் மாற துணைப்போகும் அரசு மக்களுக்கான அரசு அல்ல.. மக்கள் விரோத அரசு.. மீண்டும் ஓர் உழைப்பாளர் பேரெழுச்சியை காணப் போகிறது தமிழ்நாடு.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment