15 ஆண்டுகள் கழித்து மெகா ஸ்டாருக்கு ஜோடியாகும் திரிஷா .!

தெலுங்கில் ரீமேக்காகி வரும் லூசிபர் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் வசூல் அளவில் சாதனை படைத்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது . இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாகவும்,அதில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது . .இது சிரஞ்சீவியின் 153-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தனி ஒருவன் படத்தினை இயக்கிய … Read more