ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

மண் தரையில் விளையாடப்படும் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள டென்னிஸ் கிளப் டி ஜெனீவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே 18 தொடங்கி மே 25 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கடந்த ஞாற்றுகிழமை அன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் முதல் நிலை ஒற்றையர் டென்னிஸ் ஆட்டக்காரர் சுமித் நாகல் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸுடன் எதிர்த்து மோதினார்.

விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் சுமித் நாகலின் கை முதலில் ஓங்கினாலும் நடந்து முடிந்த அந்த முதல் செட்டில் 6-7 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியின் 2-வது செட்டில் சுமித்தை முன்னிலை பெற விடாமல் சிறப்பாக விளையாடி செபாஸ்டியன் 3-6 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி 6-7 , 3-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் முதல் நிலை டென்னிஸ் வீரரான சுமித் நாகலை தோற்கடித்தார்.

இந்த தோல்வியால் முதல் சுற்றிலேயே அதாவது நாக் அவுட் முறையில் இந்த ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்தும் வெளியேறி உள்ளார். தோல்வியடைந்த சுமித் தனது X தளத்தில், “இன்றைய தோல்வியால் நான் சிறுது துவண்டு போயிருக்கிறேன். ஆனால் ரோலண்ட் கரோஸுக்கு (பிரெஞ்சு ஓபன் -French Open) தொடருக்கு என்னை நான் தாயாரிக்கி கொண்டு வருவேன். அடுத்தது பாரிஸ் தான்”, என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும், அவரது பதிவுக்கு அவரது ரசிகர்களும் அவருக்கு தோல்விக்கு ஆறுதல் கூறியதுடன் நடைபெற இருக்கும் பிரெஞ்சு ஓபன் தொடருக்கும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.