இந்தியா

நீட் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க முடியாது.! உச்சநீதிமன்றம் அதிரடி.!

டெல்லி: கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வை இந்தியா முழுக்க சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியாகி பெரும் சர்ச்சைகளை எழுப்பியது.

அதில், ராஜஸ்தானில் ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்தது, 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்தது, 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன.

இதனை அடுத்து, குஜராத், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களில்  உள்ள நீதிமன்றங்களில் இந்த முறைகேடுகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இதனை ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சுமார் 50 மாணவர்கள் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இப்படியாக சுமார் 8 வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  நேற்று நடைபெற்ற விசாரணையில், நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (NTA), மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில், நீட் தேர்வு மதிப்பெண் கொண்டு நடைபெறும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையை (கவுன்சிலிங்) நிறுத்தி வைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டு இருந்தது. இதற்கு இன்று பதில் அளித்த நீதிபதி அமர்வு, நீட் கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.

குறைந்தபட்சம், அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் ஜூலை 8 வரையில் நீட் கவுன்சலிங் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் ஜூன் 6இல் நீட் கவுன்சலிங் தொடங்கி முடிய கால அவகாசம் ஆகும் என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்து இருந்தது. இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

Recent Posts

‘வெற்றியை கொண்டாட எங்களுடன் சேருங்கள்’- ஜெய்ஷா டிவீட் ..!

பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக…

6 hours ago

கங்கானாவை அறைந்த பெண் காவலருக்கு பெங்களூருக்கு பணிமாற்றமா.? CISF புது விளக்கம்.!

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில்…

7 hours ago

கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கண்டிஷன் போட்ட எச்.வினோத்?

சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த…

7 hours ago

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.? ஏற்பாடுகள் தீவிரம்…

ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என…

7 hours ago

நாகப்பாம்பு வாயில் சிக்கிய மருந்து பாட்டில்! வைரல் வீடியோ…

ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின்…

7 hours ago

சிறுவனை தாக்கிய தெருநாய்கள் ..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி!!

தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில்…

7 hours ago