தன்பாலின ஈர்ப்பாளர்கள் தத்தெடுக்கும் உரிமைகள்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

தன்பாலின ஈர்ப்பாளர்கள், குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

தன்பாலின ஈர்ப்பாளர்கள், குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து அவர்களுக்கான நடுநிலையான சட்டத்தை இயற்றக்கோரி அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை :

இந்த வழக்கு விசாரணையானது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற அதிகாரம் :

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, புதிய சட்டம் இயற்ற கோரும் இந்த விவகாரம்  நாடாளுமன்ற கட்டுப்பாட்டிற்கு உரியது. இந்திய அரசு, கொள்கை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது.

நாடாளுமன்றம் முடிவு :

ஏற்கனவே தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதை நாடாளுமன்றம் தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. காரணமாக, நமது நாட்டில் தந்தை வழி மரபு, சொத்துக்களில் உரிமை பங்கீடு போன்றவை உண்டு. தன்பாலின ஈர்ப்பாளர்கள் அவ்வாறு குழந்தைகளை தத்தெடுக்கும் போது மேற்கண்ட பிரச்சனைகள் எழும் என தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment