பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ ஆதரவாளர்கள் அதிபர் மாளிகை மீது தாக்குதல்

பிரேசிலின் தீவிர வலதுசாரி முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் தாக்குதல் நடத்தினர்.

போல்சனாரோவை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்றும், தற்போதைய இடதுசாரி அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் மற்ற அரசு நிறுவனங்களுக்கு நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருட்களை சூறையாடினர் ,இது ஒரு  “பாசிச” தாக்குதல் என்று ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கலவரத்துக்கு கண்டம் தெரிவித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி பிரேசிலில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலைகள் பற்றிய செய்தி குறித்து ஆழ்ந்த கவலையடைந்தேன். ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசிலிய அதிகாரிகளுக்கு எங்களது முழு ஆதரவை வழங்குகிறோம் என்று கூறியுள்ளார்.

Leave a Comment